வெளிச்சம் ...






தெருவோர குருட்டு பெண்ணிடம்
முறைகேடாய் நயவஞ்சகன் ..
தறிகெட்ட அச்செயலால்
நிறைகுடமாய் முன் வயிறு ..
இருந்தும் அவளுக்குள் ஆனந்தம்
இனி கை பிடித்து தன்னை
நடத்தி செல்ல
உலகின் வெளிச்சம் தனக்கு தந்திட
தொப்புள் கொடி உறவு வருமென்று
மகப்பேருக்காய் காத்திருந்தாள்
மங்கை  அவள் ..
கறுப்பு வெள்ளை கனவுகளோடு
~அன்புடன் யசோதா காந்த் ~

16 Responses
  1. Vishnu... Says:

    அழகிய கவிதை அன்பின் யசோதா ..
    ஏமாற்றத்திலும் ஒரு எதிர்பார்ப்பு ..

    அன்புடன்
    விஷ்ணு ..


  2. நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே
    ..


  3. Unknown Says:

    உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

    http://www.tamil10.com/

    ஒட்டுப்பட்டை பெற



    நன்றி


  4. மனதை தொடும் நல்ல கவிதை. தனக்கு ஏற்பட்ட கறையை நிறையாக எடுத்துகொள்கிறாள். இந்த பெண் எதையும் பாஸிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவது இதனால்தானோ


  5. மனமார்ந்த நன்றிகள் தமிழினி அவர்களே


  6. // Avargal Unmaigal
    மனதை தொடும் நல்ல கவிதை. தனக்கு ஏற்பட்ட கறையை நிறையாக எடுத்துகொள்கிறாள். இந்த பெண் எதையும் பாஸிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவது இதனால்தானோ //

    மனமார்ந்த நன்றிகள் அவர்கள் உண்மைகள் அவர்களே !


  7. நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே ...


  8. Anonymous Says:

    இனி- கைபிடித்து தன்னை நடத்திச் செல்ல
    எத்தனை எதிர்பார்ப்பு!..
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com


  9. நன்றி சகோதரி வேதா .இலங்கா திலகம் அவர்களே ..


  10. Admin Says:

    சிறப்பான கவிதை வாழ்த்துகள்..சகோதரி..


  11. Admin Says:

    இன்றுதான் தங்கள் தளத்திற்கு வர முடிந்தது.இனி என் வருகையை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்..தொடர்ந்து சிறப்பான பதிவுகளைத் தர வாழ்த்துகள்..


  12. நன்றி சகோ மதுமதி அவர்களே ...


  13. அருமையான கவிதை. உங்கள் கவிதைகள் சிறப்பாகட்டும். கவிஞர் மதுமதி மூலம் இந்த தளத்திற்கு வந்துள்ளேன். வாழ்த்துகள்.


  14. arasan Says:

    மனித மிருகத்தின் வேட்டை தனத்தை இயல்பான வரிகளில் கொஞ்சம் அழுத்தமாய் கூறிய விதம் சிறப்பு ,... வாழ்த்துக்கள்


  15. நன்றி ஸ்டார்ஜன் அவர்களே ..


  16. நன்றி அரசன் சே அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..